தாஜ்மகாலை காண ஒரு நாள் 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி..
இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
புதுடெல்லி
யுனெஸ்கோவின்
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட 'தாஜ்மஹால்' காதலின் சின்னமாக
பார்க்கப்படுகிறது. முகாலய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்க்கு
காதல் பரிசாக இதை கட்டினார். முகாலய கட்டகலையின் சிறந்த படைப்பாக இது
பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து
சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.
இந்தியாவின்
அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதன் படி ஒரு நாளைக்கு 40
ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க
அனுமதிக்கப்படுவர். 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு நிறுத்தப்படும்.
தாஜ்மகாலை பராமரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 20 ஆம் தேதி முதல்
இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால் வெளிநாட்டவருக்கு
எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.
-daily thanthi news today
Comments
Post a Comment